புழல் காவாங்கரையில் இடநெருக்கடியால் அவதிப்படும் அரசு பள்ளி மாணவர்கள் போதிய பள்ளி கட்டிடங்கள் கட்டி அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டுமென பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி புழல் காவாங்கரையில் உள்ள தொடக்க பள்ளி கடந்த 2017 ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டு உயர்நிலை பள்ளியாக மாற்றப்பட்டது.
6 ஆண்டுகள் ஆன நிலையிலும் அரசு பள்ளி கட்டிடங்கள் 4 மட்டுமே உள்ளதால் 750 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு படிப்பதால் போதிய இடவசதி கழிப்பிடம் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாமல் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
மேலும், இடவசதி இல்லாததால் அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்கி படிக்கும் நிலையும் உள்ளதாகவும் கழிவறை உள்ளிட்டவை முறையாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதுகுறித்து, கல்வி துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காததால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
பின்பு, அரசு தலையிட்டு உரிய பள்ளி கட்டிடங்கள் கட்டி தர வேண்டும் எனவும் போதிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
—–ம. ஶ்ரீ மரகதம்







