தெலங்கானாவில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது!

தெலங்கானாவில், ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர் கடந்த திங்கள்கிழமை பெங்களூரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி தொடர்பாக…

தெலங்கானாவில், ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்

கடந்த திங்கள்கிழமை பெங்களூரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி தொடர்பாக ஹைதராபாத்தில் பெருமளவில் சூதாட்டம் நடைபெற்றதாக ஹைதராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் ஹைதராபாத் சாய் அனுராக் காலனியில் உள்ள, வீடு ஒன்றில் போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக , அங்கிருந்த 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மேலும், ஐபிஎல் சூதாட்டத்தின் முக்கிய பிரமுனரான விஜயவாடாவை சேர்ந்த
பாண்டுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், அவர்களிடம் இருந்து 60 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 5 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் வங்கி டெபாசிட், சூதாட்டம் நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், செல்போன்கள்,
லேப்டாப்கள் மற்றும் டிவி ஆகிவற்றை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து
விசாரணை நடத்துகின்றனர்.

—கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.