முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள் சட்டம்

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் – மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை

திருவள்ளூர் அருகே வேலம்மாள் தனியார் பள்ளியில் உள்ள 3 வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த  தொலைபேசி அழைப்பால், மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டில் உள்ள வேலம்மாள் தனியார் பள்ளி வளாகத்தில், 1 மெட்ரிக்குலேசன், 2 இன்டர்நேஷனல் பள்ளிகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாக குறுஞ்செய்தி மூலம் மிரட்டல் புகார் வந்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் 3 பள்ளிக்கு விடுமுறை அளித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், பெற்றோர்கள் மூலம் மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் கவரப்பேட்டை காவல் துறையினர் , டிஎஸ்பி கிரியாசக்தி, காவல் ஆய்வாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவி மற்றும் மோப்பநாய் உதவியுடன் ஒவ்வொரு கட்டிடத்திலும், அறைகளிலும் தொடர்ந்து தீவிர சோதனை மேற்கொண்டு ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சென்னையில் இருந்து மருதம் சிறப்பு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சீசர் மோப்ப நாய் உள்ளிட்ட இரண்டு மோப்ப நாய்கள் மூலம் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 5,000 மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வரும் பள்ளியில் தற்போது வரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டல் புரளியாக இருக்கும் என நம்புவதாகவும், தொடர்ந்து தீவிர சோதனை மேற்கொண்டு உரிய தகவல் தெரிவிப்பதாகவும் காவல்துறை சார்பில் தகவல் தெரிவித்துள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் புகாரின் காரணமாக அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அச்சமடைந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பல்கலை. பாடத் திட்டத்தில் ‘இந்து தர்மம்’

G SaravanaKumar

சாலை அமைப்பதில் கின்னஸ் சாதனை படைத்த இந்தியா

Mohan Dass

ரஜினியை அத்தான் என கூப்பிடும் மீனா; குழப்பத்தில் ரசிகர்கள்

G SaravanaKumar