முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறவினர்களுக்கு டென்டர் கொடுத்த விவகாரம் – திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, தாம் பொறுப்பு வகித்து வந்த நெடுஞ்சாலைதுறையில்  பல்லாயிரகணக்கான ரூபாய் டென்டர்களை முறைகேடாக தமது சம்பந்தி மற்றும் அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்களுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதிமுக ஆட்சியில் ரூ.3,120 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை தனது உறவினர்களுக்கு முறைகேடாக வழங்கிய புகார் தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு வரும் திங்கட்கிழமையன்று அதிமுக பொதுக்குழு நடக்கும் அதே நாளில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமது பதவியை முறைகேடாக பயன்படுத்தி அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரூ. 3120 கோடி டெண்டர்களை தனது சம்பந்திக்கு கொடுத்தாக திமுக சார்பில் வழக்கு தொடரபட்டது. தாம் பொறுப்பு வகிக்கும் நெடுஞ்சாலைத்துறையில் பல்லாயிரம் கோடிக்கு டெண்டர்களை தமது சம்பந்திக்கும், சம்பந்தி ஒப்பந்ததாரராக இருக்கும் நிறுவனங்களுக்கும் அளித்தது தொடர்பாக அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீது கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் தேதியன்று லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத் துறையில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

அதனை விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என உயர் நீதிமன்றத்தில் அறிக்கை செய்தது. இதனை எதிர்த்து, முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு உள்ளதால் அவரது கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை சரிவர விசாரிக்கவில்லை. எனவே சிபிஐ விசாரணை தேவை என திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதடியது. இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், அவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, உச்சநீதிமன்றத்தில் இடைக்கால தடை உத்தரவு வாங்கியுள்ளார். இந்த நிலையில் அந்த வழக்கு மீண்டும் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. அதிமுக பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நாளில் விசாரணைக்கு வருவதால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

இராமானுஜம்.கி

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சீனாவில் சரியும் பொருளாதாரம்

Halley Karthik

ஜெயலலிதா ஆவி சும்மா விடாது- ஜெயக்குமார்

Jayasheeba

இலங்கையில் தமிழர் பிரதமர் ஆக சிங்களர்கள் குரல்- காரணம் என்ன?

Web Editor