விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகம் – பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை!

விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகம் பல இடங்களில் சரிவர வழங்கப்படவில்லை என்ற புகாரையடுத்து, புத்தக விநியோகம் குறித்து வரும் 15-ம் தேதி பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் கடந்த ஜூன் 13ஆம் தேதி…

விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகம் பல இடங்களில் சரிவர வழங்கப்படவில்லை என்ற புகாரையடுத்து, புத்தக விநியோகம் குறித்து வரும் 15-ம் தேதி பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் கடந்த ஜூன் 13ஆம் தேதி திறக்கப்பட்டன. பள்ளிகள் திறந்து ஒரு மாதம் ஆகப்போகும் நிலையில், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் பல இடங்களில் சரிவர வழங்கப்படவில்லை என பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், இயக்குநர்கள் உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.

அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குவதை உறுதி செய்தல், விலையில்லா சீருடை விநியோகம், எண்ணும் எழுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கான அங்கீகாரம், கட்டட இடிப்பு, துணைத் தேர்வு, சிறப்பு ஊக்கத்தொகை, இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்டவை குறித்தும் வரும் 15ம் தேதி ஆலோசனை மோற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.