முழு கொள்ளளவை எட்டும் கிருஷ்ணராஜசாகர் அணை – பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டி வரும் நிலையில், காவிரி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஆர்எஸ் அணையின் முழு கொள்ளளவு124.80 அடி. நீர் இருப்பு 121.42 அடியாகவும், நீர்…

கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டி வரும் நிலையில், காவிரி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஆர்எஸ் அணையின் முழு கொள்ளளவு124.80 அடி.
நீர் இருப்பு 121.42 அடியாகவும், நீர் வரத்து 34,304 கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து 3,207 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணையின் முழு கொள்ளளவு 84 அடி. நீர் இருப்பு 80.58 அடியாகவும், நீர் வரத்து 14,481 கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து 4,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இரண்டு அணைகளில் இருந்தும் மொத்தமாக 7,207 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டி வருகிறது. இதனால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி எந்த நேரமும் அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் கன அடி வரை நீர் திறக்கப்படும். ஆகவே தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் தங்களுடைய பொருட்களுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பொதுப் பணித் துறை தெரிவித்துள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.