முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

ஒடிசா சுகாதாரத் துறையின் வைரல் “தி பேமிலி மேன் ” மீம்

ஒடிஸாவை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சகம் மக்கள் அனைவரும் கோவிட் -19 தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக புதுவகையான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து  பாதுகாத்துக் கொள்ள மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்துமாறு அரசு தரப்பிலிருந்தும், பல்வேறு துறையினரும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒடிசாவில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சகம் “தி பேமிலி மேன்” வெப் சீரிஸ் வரும் டைலாக்கை பயன்படுத்தி மீம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

“தி பேமிலி மேன்” வெப் தொடர் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் அனைவராலும் அதிகம் பார்க்கப்பட்ட சூப்பர் ஆக்க்ஷன் திரில்லர் தொடராகவே கருதப்படுகிறது. இப்படம் தீவிரவாத தாக்குதல், தீவிரவாத தாக்குதல் தடுப்பு நிறுவனத்தின் செயல்பாடு போன்றவற்றை சித்தரித்துள்ளது. இந்த தொடரின் நாயகன் மனோஜ் பாஜ்பாய் எவ்வாறு தனது சவால்கள் மிக்க வேலை மற்றும் தனது குடும்பத்தை சமநிலை படுத்துகிறார் என்பதையும் இந்த தொடர் சித்தரித்துள்ளது.

தற்போது வெளியான “தி பேமிலி மேன்” தொடரில் வரும் வசனத்தை கொண்டு இந்த மீம் கொரோனா தடுப்பூயின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது. கொரோனா நோயிலிருந்து தப்பிக்க கிருமி நாசினி பயந்துபடுத்துவது, முக கவசம் கட்டாயம் அணிவது, சமூக இடைவேளை கடைபிடிப்பது மற்றும் ஊரடங்கை பின்பற்றுவது போன்ற அனைத்தயும் பின்பற்றுபவராக இருந்தாலும், கோவிட் -19 தடுப்பூசி போடுவது மிகவும் அவசியம். மேலும் நோய் தொற்றில் இருந்து நம்மை முழுவது பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி போடுவது கட்டாயம் என்பதை இந்த மீம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“செல்லம் ஐயா, நான்  ஃபேஸ்மாஸ்க் அணிந்து என் கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்துகிறேன். இதற்கு மேலும் நான் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமா? என்று  பாஜ்பாயின் கதாபாத்திரம் தொலைபேசியில் கேட்பது போலும், அதற்கு

“ஆம் ஸ்ரீகாந்த் கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் செலுத்திக்கொள்ள வேண்டும் இதுவே நம்மை இந்நோயிலிருந்து பாதுகாக்கும்” என்று  நடிகர் உதயபானு மகேஸ்வரன் தான் நடித்த கதாபாத்திரமான ‘செல்லம் சார்’ பதிலளிப்பது போல அமைந்துள்ளது இந்த மீம்.

இந்த தொடரில் செல்லம் சார் ஒரு ஓய்வுபெற்ற உளவாளியாகவும், ஒவ்வொரு முறையும் தொடரனின் நாயகன் ஸ்ரீகாந்திற்கு துப்பு தரும் கதாபாத்திரமாக நடித்திருந்தார்.  ‘தி பேமிலி மேன்’ தொடர் மீம் தற்போது தேசிய அளவில் வைரல் மீம்-ஆக இடம்பெற்றுள்ளது.

Advertisement:

Related posts

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணம்: அரசாணை வெளியீடு!

Ezhilarasan

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கிடுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

Vandhana

மமதாவுக்கு எதிராக களமிறங்கும் திரிணாமூல் முன்னாள் அமைச்சர்!

Halley karthi