பண்ணாரி அம்மன் கோயில் உண்டியலில் ரூ.1 கோடி காணிக்கை!

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் உண்டியலில் காணிக்கை யாக ரூ.1 கோடி இருந்தது. சத்தியமங்கலம் அடுத்த அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் குண்டம் பெருந்திருவிழா கடந்த ஏப்ரல் நான்காம் தேதி அதிகாலை வெகு விமர்சையாக நடைபெற்று…

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் உண்டியலில் காணிக்கை யாக ரூ.1 கோடி இருந்தது.

சத்தியமங்கலம் அடுத்த அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் குண்டம் பெருந்திருவிழா கடந்த ஏப்ரல் நான்காம் தேதி அதிகாலை வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது. இந்த விழாவில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அம்மனை வழிபட்டனர்.

பொதுவாக குண்டம் திருவிழாவில் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை காணிக்கையாக உண்டியலில் செலுத்துவது வழக்கம். அதன்படி கடந்த இரண்டு நாட்களாக கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் தற்போது திறக்கப்பட்டு ஒவ்வொன்றாக எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் நேற்று இரவு வரை எண்ணப்பட்ட உண்டியல்களிருந்து ரூ.1 கோடி ரொக்கம் இருந்தது. மேலும் 423 கிராம் தங்கமும் 144 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவை சேகரிக்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்போது கோயில் செயல் அலுவலர் மேனகா முன்னிலையில் பரம்பரை அறங்காவலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் இந்த காணிக்கை என்னும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.