மதுரையில் சொந்த பைக்கை டாக்ஸியாக பயன்படுத்தி வருமானம் ஈட்டிய இளைஞர்களுக்கு போக்குவரத்து அலுவலர் அபராதம் விதித்தார்.
மதுரை மாநகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக பைக் டாக்சி என்ற பெயரில் உரிய
அனுமதி இல்லாமல் தனி நபர்கள் தங்களுடைய சொந்த வாகனத்தை பைக் டாக்ஸியாக
பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் பெருமளவு பாதிக்கப் படுவதாக தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் புகார் வந்துள்ளது.
இந்த நிலையில் மதுரை மாநகர் பைபாஸ் ரோடு பகுதியில் சட்டவிரோதமாக உரிய
அனுமதியின்றி பை டாக்ஸி இயக்கியதாக 10க்கும் மேற்பட்ட இளைஞர்களை பிடித்து
மதுரை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் ஆட்டோ ஓட்டுநர் கள்
ஒப்படைத்தார்கள்.
சொந்த பயன்பாட்டுக்கு வாங்கிய வாகனங்களை பைக் டாக்ஸியாக இயக்கி வந்த இளைஞர்களுக்கு தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் அபராதம்
விதித்தார்.
—ம. ஶ்ரீ மரகதம்







