புனித வெள்ளியை முன்னிட்டு பெரிய வியாழன் நிகழ்ச்சியில் இயேசுபிரான் சீடர்களின் பாதங்களைக் கழுவும் புனித சடங்கு, மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது .
மயிலாடுதுறையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் ஆலயம் அமைந்துள்ளது. இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளியை முன்னிட்டு பல்வேறு மாலை அணிதல், விரதம் இருப்பது, சாம்பல் புதன் உள்ளிட்டப் பல்வேறு நிகழ்ச்சிகள் ஆலயத்தில் நடைபெற்றன.
அதன் ஒரு பகுதியாக இயேசுபிரான் பங்கேற்ற கடைசி இரவு விருந்து நிகழ்ச்சி ஆலயக் கலையரங்கத்தில் நடைபெற்றது.பெரிய வியாழன் என்று அழைக்கப்படும்
இந்நிகழ்ச்சியில் இயேசு சீடர்களின் பாதங்களைக் கழுவும் சடங்கு நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆலய பங்குத் தந்தை தார்சிஸ் ராஜ் தொண்டர்களின் பாதங்களைக் கழுவினார். அதனைத் தொடர்ந்து திவ்ய நற்கருணை ஆசீர் நிகழ்ச்சி
நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
—-ரெ.வீரம்மாதேவி







