அதிமுக பொதுச்செயலாளர் பதவியை யாரோ 4 பேர் முடிவு செய்ய முடியாது என சசிகலா குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா, சென்னை மாவட்ட 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தீர்ப்பில், சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிய அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என சென்னை உரிமையில் நீதிமன்ற நீதிபதி ஜெ. ஸ்ரீதேவி உத்தரவிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோயிலில் வி.கே.சசிகலா தனது அண்ணன் மகளுடன் சாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசினார்.அதிமுக பொதுச்செயலாளர் பதவியை யாரோ நாலு பேர் முடிவு செய்ய முடியாது எனக் குறிப்பிட்ட அவர், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கவும் நீக்கவோ முடியும். இது எம்ஜிஆர் வகுத்துத் தந்த திட்டம் என்றார்.
தொடர்ந்து, அதிமுக யாராலும் அசைக்க முடியாத கோட்டை எனவும், தொடர்ச்சியாக மக்கள் பணி செய்யவுள்ளதாகவும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார். பாஜக வளர நினைப்பதில் தவறில்லை ஒரு புதுக் கட்சி தொடங்கினால் அவர்கள் வளர தான் நினைப்பார்கள் என்றும் கூறினார். பாஜகவுடன் அதிமுக இணைந்து செயல்படுவது போல் உள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த சசிகலா இது கால சூழ்நிலை என்றார்.