நெல்லையில் மதுஅருந்திய போது நேரிட்ட மோதலில், இளைஞரை மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்து, விபத்தில் உயிரிழந்ததாக நாடகமாடிய நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை திருமால் நகரை சேர்ந்த இளைஞர் ஹரிகரன் என்பவர், தனது நண்பர் ப்ரீத்தம் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். மதுபோதையில் நண்பர்கள் மத்தியில் நடந்த தகராறில், ஹரிகரனை கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஹரிகரனை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பைக் விபத்தில் தங்களது நண்பர் ஹரிகரன் படுகாயமடைந்ததாகக் கூறி, மருத்துவமனை பதிவேட்டில் பதிவுசெய்து நாடகமாடியுள்ளனர். இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஹரிகரன் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நண்பர்கள் கூறிய இடத்தில் விபத்து எதுவும் நடைபெறாததை கண்டறிந்தனர்.
பின்னர் நண்பர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் மது போதையில் ஹரிகரனை கீழே தள்ளியதாகவும், அப்போது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, கொலை வழக்கு பதிவு செய்து போலீசார், நண்பர்கள் நான்கு பேரையும் கைது செய்தனர்.