சசிகலா அரசியலில் இருந்து விலகியதற்கு பின்னால் பாஜகவின் பங்கு உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கருத்து தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல், டீசல் விலை உயர்வால், பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். கேரளாவில் புதிய வேளாண் சட்டங்களை நிராகரித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், ஆனால் தமிழகத்தில் ஆளும் அரசு அதனை ஆதரிக்கிறது, எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், பெட்ரோல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் விளம்பர போஸ்டர்களை, தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை, என்றும் அவர் குறிப்பிடார். மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர்கள் அதிகமாக பரப்புரையில் ஈடுபடவுள்ளதால், அங்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது என்றும் சீதாராம் யெச்சூரி குறிப்பிட்டார்.
மக்களின் நலனுக்காக தான் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். சசிகலா அரசியலில் இருந்து விலகியதிற்கு பின்னால் பாஜகவின் பங்கு இருக்கிறது. இந்த விலகல் பாஜகவிற்கு மகிழ்ச்சி அளிக்கும் என்றும் தெரிவித்தார்.







