ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தேர்தல் நடத்தை விதியை மீறி, அரசு பள்ளியில் பரப்புரை மேற்கொண்டதாக, தேர்தல் ஆணையத்திடம், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், அவர் அளித்துள்ள புகாரில், தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, கல்வி நிறுவனங்களில் பரப்புரை மேற்கொள்வது, தடை செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார். தமிழகம் வந்த ராகுல் காந்தி, கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியில் உள்ள, ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளிக்கு, கடந்த ஒன்றாம் தேதி சென்றதாகவும், அங்கு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடுடள்ளார்.
பள்ளி வளாகத்தில் பரப்புரை மேற்கொண்ட ராகுல் காந்தி, நாடு முழுவதும் பெரும் அளவில் , கோபம் பரவி இருப்பதாக பேசியதாகவும், அவர் தெரிவித்துள்ளார். எனவே ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கும்படியும், எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.







