கேரளா பாஜக முதல்வர் வேட்பாளர் ஸ்ரீதரன்!

மெட்ரோ மனிதர் என்று அழைக்கப்படும் ஸ்ரீதரன், கேரள தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறக்குவார் என மத்திய அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், கேரளாவில் முதலமைச்சர் வேட்பாளராக…

மெட்ரோ மனிதர் என்று அழைக்கப்படும் ஸ்ரீதரன், கேரள தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறக்குவார் என மத்திய அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், கேரளாவில் முதலமைச்சர் வேட்பாளராக ஸ்ரீதரனை அறிவித்து பாஜக தேர்தலை சந்திக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இன்று காலை திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில பாஜக தலைவர் சுரேந்திரன், இடதுசாரி கூட்டணி அரசை அகற்றும் வேலையை ஸ்ரீதரன் மேற்கொள்வார் என்று பாஜக தலைவர் சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் மெட்ரோ ரயில் தலைவராக இருந்தவர் ஸ்ரீதரன் கேரளாவை பூர்விகமாக கொண்டவர். கடந்த வாரம் அவர் பாஜகவில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.