மொபைல் போன் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக வகிக்கும் சாம்சங், அதன் ‘கேலக்ஸி இசட் போல்டு 5, ஃப்ளிப் 5 ரக ‘போல்டபிள்’ மாடல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவிலேயே தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
தென்கொரியாவைச் சேர்ந்த மின்னணு சாதனத் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், அதன் கேலக்ஸி இசட் போல்டு 5, பிளிப் 5 ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.
இதற்கான முன்பதிவு நேற்றே (ஜூலை 27) துவங்கிவிட்ட நிலையில், சாம்சங் நிறுவனத்தின் தென்மேற்கு ஆசியப் பிரிவுக்கான தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜே.பி.பார்க் மற்றும் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
அதில், கேலக்ஸி இசட் போல்டு 5, ஃப்ளிப் 5 ரக ‘போல்டபிள்’ மாடல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவிலேயே தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளதோடு, இந்த போன்கள் நொய்டாவில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








