இறந்த மனைவிக்கு 15 லட்ச ரூபாய் மதிப்பில் கோயில் கட்டி, வணங்கி வரும் விவசாய கணவனின் அன்பு காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் மான்கானூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. விவசாயியான இவருக்கு ஈஸ்வரி என்பவருடன் திருமணமாகி 35 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது. இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கடந்த ஆண்டு சுப்பிரமணியின் மனைவி ஈஸ்வரி காலமானார். மனைவி இறந்த துக்கத்தில் மிகுந்த வேதனையடைந்த சுப்பிரமணி, அவருக்கு சொந்தமான 15 சென்ட் நிலத்தில், 15 லட்ச ரூபாய் செலவில், 6 அடி உயரத்தில் ஈஸ்வரியின் திருவுருவ சிலையை நிறுவி, அவருக்கு கோயில் கட்டி வணங்கி வருகிறார். இதனை அப்பகுதி மக்கள் வியந்து பார்த்துச் செல்கின்றனர்.
இதையும் படியுங்கள் : 30 அமெரிக்க நகரங்களை ஏமாற்றிய நித்தியானந்தா; கைலாசாவால் எழுந்த புதிய சர்ச்சை!
இறந்த மனைவிக்கு சிலை அமைத்து கோயில் கட்டி தினமும் வணங்கி வரும் விவசாயி சுப்பிரமணிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மார்ச் 31ஆம் தேதி மனைவி ஈஸ்வரியின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, 500 பெண்களுக்கு இலவச சேலை மற்றும் அன்னதானம் வழங்க சுப்பிரமணி முடிவு செய்துள்ளார்.