தேசிய கூட்டுறவு அமைப்பு மூலம் நெல் கொள்முதல் வேண்டாம்-விவசாயிகள் போராட்டம்!

தேசிய கூட்டுறவு கூட்டமைப்பு மூலம் நெல் கொள்முதல் நிலையத்தை மத்திய அரசு செயல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருவண்ணாமலையில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தேசியக் கூட்டுறவு கூட்டமைப்பு கொள்முதல் நிலையத்தை அமல்படுத்த வேண்டாம் பழைய…

தேசிய கூட்டுறவு கூட்டமைப்பு மூலம் நெல் கொள்முதல் நிலையத்தை மத்திய அரசு
செயல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருவண்ணாமலையில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தேசியக் கூட்டுறவு கூட்டமைப்பு கொள்முதல் நிலையத்தை அமல்படுத்த வேண்டாம் பழைய முறைப்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழகம் மூலம் நேரடி கொள்முதல் நிலையத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரி சாலையில் தோசை சுட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய முறைப்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழகம் மூலம் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலமே விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

—ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.