சமயபுரம் மாரியம்மன் கோயில் நவராத்திரி பெருவிழா – பக்தர்கள் சிறப்பு வழிபாடு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற நவராத்திரி பெருவிழாவில் நான்காம் நாளான இன்று அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பலித்தார். திருச்சி மாவட்டம்,  சமயபுரம் மாரியம்மன் கோயில்,  அம்மன் ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக…

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற நவராத்திரி பெருவிழாவில் நான்காம் நாளான இன்று அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளி
பக்தர்களுக்கு அருள்பலித்தார்.

திருச்சி மாவட்டம்,  சமயபுரம் மாரியம்மன் கோயில்,  அம்மன் ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் நவராத்திரி  பெருவிழாவாக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இதன் அடிப்படையில் நிகழாண்டில் நவராத்திரி திருவிழா நான்காம் நாளான இன்று
அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளி,  பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனைத் தொடர்ந்து அம்மன் கோயில் வளாகத்தில் சுற்றி வந்து பக்தருக்கு
காட்சியளித்தார்.  இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என பக்தி
முழங்க அம்மனை வழிபட்டு சென்றனர்.

இந்த நவராத்திரி திருவிழா இம் மாதம் 15 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை
நடைபெறுகிறது.  இந்த விழாவின் முக்கிய அம்சமாக நவராத்திரி உற்சவமும், சரஸ்வதி
பூஜை மற்றும் விஜயதசமி நாளான 24ஆம் தேதி அன்று இரவு 7:30 மணிக்கு அம்பாள்
புறப்பட்டாகி வன்னி மரம் அடைந்து அம்பு போட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நவராத்திரியில் உற்சவத்தின் போது தினமும் மாலை 4.30 மணிக்கு சிறப்பு
அபிஷேகம்,  அலங்காரம்,  தீபாராதனை நடைபெற்று,  மாலை 6 மணிக்கு புறப்பட்டாகி
திருக்கோயில் மேற்கு பிரகார நவராத்திரி மண்டபத்தில் வீற்றுருந்து அம்மன்
அருள்பாலிப்பார்.  தினசரி இரவு 8 மணி அளவில் சிறப்பு தீபாரதனையும் மாலை 6:00
மணி முதல் இரவு 9 மணி வரை கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.