நடிகை சமந்தாவின் பிறந்தநாளை ஒட்டி, அவர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக சமந்தா நடித்துள்ளார். நான் ஈ. அஞ்சான், கத்தி, 24, தெறி, மெர்சல் போன்ற பிரபலமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். சமந்தா திடீரென மயோசிடிஸ் என்ற அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக திரைப்பங்களில் நடிப்பதற்கு சில காலம் இடைவெளி விட்ட சமந்தா நோய் குணமான நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
இதையும் படியுங்கள் : மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு அறிவிப்பு!
இதையடுத்து, இன்று ஏப்ரல் 28 ஆம் தேதி 37 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் அவருக்கும் பல திரைபிரபலங்கள் தங்களது வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமந்தா நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
அடுத்ததாக ட்ரலாலா மூவிங் பிக்டர்ஸ் தயாரிப்பில் “மா இண்டி பங்காரம்” என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் இயக்குனர், சக நடிகர்களை பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுக்குறித்து சமந்தா அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அதில் மின்னுவது எல்லாம் பொன்னல்ல என்ற தலைப்பில் இத்திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.







