முக்கியச் செய்திகள் குற்றம்

எச்சில் துப்பிய விவகாரம்; காவலர் லூயீஸ் ஜோன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்

சாலையில் சென்ற நபர் ஒருவர் கீழே எச்சில் துப்பிய போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் தன்னை நோக்கி தான் எச்சில் துப்பினாய் எனக்கூறி அந்த நபரை சரமாரியாக அடித்ததாக சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விவகாரத்தில், காவலர் லூயீஸ் ஜோன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்படுள்ளார்.

சைதாப்பேட்டை பேருந்து நிலையம் எதிரே சாலையில் சென்ற ஒரு நபர் கீழே எச்சில் துப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் ஒருவர் தன்னை நோக்கி ஏன் எச்சில் துப்பினாய் எனக்கூறி அந்த நபரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அந்த நபரின் முகம் கிழிந்து ரத்தம் வழிந்துள்ளது. பொதுமக்கள் காயம் பட்ட நபரை மீட்டு சைதாப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அண்மைச் செய்தி: ‘தாமஸ் கோப்பை பேட்மிண்டன்; வரலாறு படைத்தது இந்திய அணி’

இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட காவலர் லூயீஸ் ஜோன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்படுள்ளார். சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், உதவி ஆணையர் இது தொடர்பாக விசாரணை செய்து வருவதாகவும் காவலர் லூயிஸ் ஜோன் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அவர் இடைநீக்கம் செய்யப்படுவார் என சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

போதை வழக்கு: போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை கைது

Saravana Kumar

குறையும் கொரோனா: பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள்!

Halley Karthik

ஒலிம்பிக்கில் ரேவதி பங்கேற்க ஆகும் செலவை ஏற்கிறேன்: அமைச்சர் மூர்த்தி

Ezhilarasan