முக்கியச் செய்திகள் இந்தியா

காஷ்மீரில் நடக்கும் இனப்படுகொலை குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும்: ராகுல் காந்தி

காஷ்மீரில் பண்டிட்டுகளுக்கு எதிராக நடக்கும் இனப்படுகொலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ராகுல் பட் என்ற அரசு அலுவலர், புட்காம் மாவட்டத்தில் உள்ள சதூரா என்ற நகரில் தனது அலுவலகத்தில் பணிபுரிந்து கொணடிருந்தபோது தீவிரவாதிகளால் கடந்த வியாழக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார்.

ராகுல் பட்டின் தாயார் அழும் வீடியோவை இணைத்து, தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி கருத்து பதிவிட்டுள்ளார். அதில், தி காஷ்மீர் ஃபைல் என்ற திரைப்படம் குறித்து பிரதமர் பேசுவதை சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு திரைப்படம் குறித்து பேசுவதைக் காட்டிலும், காஷ்மீரில் பண்டிட்டுகளுக்கு எதிராக நடக்கும் இனப்படுகொலை குறித்து பிரதமர் பேச வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

காஷ்மீரின் பாதுகாப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்க வேண்டும் என்றும் அங்கு அமைதி ஏற்பட முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை எப்போது வெளியாகும்? – ராகுல்

Niruban Chakkaaravarthi

அமெரிக்க ஓபன்: பட்டம் வென்றார் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ்

Ezhilarasan

லாவகமாக பாம்பு பிடிக்கும், பெண் வனத்துறை அதிகாரி: வைரலாகும் வீடியோ

Arivazhagan CM