முக்கியச் செய்திகள் விளையாட்டு

தாமஸ் கோப்பை பேட்மிண்டன்; வரலாறு படைத்தது இந்திய அணி

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில், 73 வருடங்களில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்திய அணி.

தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற போட்டியில், உபெர் கோப்பையில் தாய்லாந்திடம் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து பெண்கள் அணி. ஆனால், இந்திய ஆண்கள் பேட்மிண்டன் அணி பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தாமஸ் கோப்பையின் அரையிறுதிக்குள் நுழைவதற்கு மலேசியாவை 3-2 என்ற கணக்கில் வெற்றியைப் பெற்றது. இதனால், தாமஸ் கோப்பையில் இந்தியாவுக்கு ஒரு வெண்கலம் உறுதியாகியுள்ளது என பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.

அண்மைச் செய்தி: ‘ஈரோடு, திருப்பூர் உட்பட 6 மாவட்டங்களில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்’

இந்நிலையில், தாய்லாந்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஶ்ரீகாந்த் தலைமையிலான இந்திய அணி, இந்தோனேசியாவை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

இந்திய அணி ஒற்றையர் பிரிவில் லக்ஷய சென் மற்றும் ஶ்ரீகாந்த் கிடாம்பியும், இரட்டையர் பிரிவில் சீரக் செட்டி, ரங்கி ரெட்டி இணையும் வெற்றி பெற்றுள்ளது. முதலில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய நிலையில் 3-0 என வெற்றியை பதிவு செய்தது இந்திய பேட்மின்டன் அணி. 73 வருடங்களில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி திடீர் விலகல்

Halley Karthik

இ-பதிவு இணையதளம் மாலைக்குள் சரிசெய்யப்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ்

Halley Karthik

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: 2 பேர் உயிரிழப்பு!

Janani