கொரோனா நிவாரண நிதிக்குத் தங்க சங்கிலி வழங்கிய பெண்: பணி ஆணை வழங்கிய அமைச்சர்!

கொரோனா நிவாரண நிதிக்கு தன்னுடைய இரண்டு சவரன் தங்க சங்கிலியை அளித்த இளம் பெண் சௌமியாவுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சேலம் மாவட்டம் மேட்டூர் சென்றபோது, அங்குள்ள பொதுமக்கள்…

கொரோனா நிவாரண நிதிக்கு தன்னுடைய இரண்டு சவரன் தங்க சங்கிலியை அளித்த இளம் பெண் சௌமியாவுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சேலம் மாவட்டம் மேட்டூர் சென்றபோது, அங்குள்ள பொதுமக்கள் அவரிடம் மனு அளித்தனர். அப்போது மேட்டூர் பகுதியைச் சேர்ந்த சௌமியா என்ற இளம்பெண், மனுவோடு தன்னுடைய இரண்டு சவரன் தங்க சங்கிலியை முதலமைச்சரிடம் வழங்கினார்.

இதனைக் கண்டு நெகிழ்ந்த முதலமைச்சர், பெண் சௌமியாவை பாராட்டி ட்விட்டரில் பதிவு செய்தார். இதனிடையே, தாயை இழந்த நிலையில் அரசுப் பணி வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் உருக்கமாகக் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இளம் பெண்ணின் கோரிக்கையை ஏற்றுத் தனியார் நிறுவனத்தில் பணி நியமன ஆணையை அமைச்சர் செந்தில் பாலாஜி, அப்பெண்ணின் இல்லத்திற்கு நேரில் சென்று வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.