சேலம் மேற்குத் தொகுதி பாமக சட்டப் பேரைவ உறுப்பினருக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மேற்குத் தொகுதி எம்எல்ஏ இரா.அருளுக்கு ஏற்கெனவே முதல் கொரோனா அலையின்போது தொற்று ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். பின்னர், முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த அருளுக்கு நேற்று உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்கள் ஆலோசனையின் சேலம் தனியார் மருத்துவமனையில் அருள் சிகிச்சை பெற்று வருகிறார்.
2வது முறையாக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-ம.பவித்ரா