முக்கியச் செய்திகள் இந்தியா

‘அக்னிபாத்’ போராட்டம்: விமானப்படை தளபதி எச்சரிக்கை

அக்னிபாத்‘ திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் காவல்துறையிடமிருந்து தடையில்லா சான்றை பெற முடியாது என விமானப்படை தளபதி எச்சரித்துள்ளார்.

17 வயது நிரம்பிய இளைஞர்கள் 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றலாம் என பாதுகாப்புத்துறை சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள் என்றும் இந்த திட்டத்திற்கு அக்னிபாத் (அக்னிபாதை) என்றும் பெயரிடப்பட்டது. ஆனால் இவர்களில் 75 சதவிகிதமானோர் 4 ஆண்டுகளுக்கு பின்னர் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. ரயில்கள் எரிக்கப்பட்டன. தெலங்கானாவில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பதட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இத்திட்டத்தின் கீழ் விரைவில் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் தெரிவித்தார். சூழல் இவ்வாறு இருக்க, அக்னிபாத் திட்டம் தேசத்திற்காக உருவாக்கப்பட்டது. இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கடற்படை தளபதி ஹரி குமார் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த சூழலில் தமிழ்நாட்டில் சென்னையிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சென்னை தலைமை செயலகம் அருகே உள்ள போர் நினைவு சின்னம் அருகில், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டுமென காவல்துறையினர் எச்சரித்தும் அவர்கள் கலைந்து செல்லாத நிலையில், காவல்துறையினர் கைது நடவடிக்கையில் இறங்கினர்.

போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அக்னிவீரர்களுக்கு சிஏபிஎஃப் (Central Armed Police Forces) எனப்படும் மத்திய அயுதப்படை மற்றும் அசாம் ரைஃபில் படைப்பிரிவில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்த இரண்டு படைப்பிரிவில் சேரும் முதல் பேட்ச் வீரர்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வும், அடுத்தடுத்த பேட்ச்களுக்கு 3 ஆண்டுகள் தளர்வும் வழங்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு அரசு வேலை கேள்விக்குறியாகும் என விமானப்படை தளபதி விஆர் சவுத்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித் அவர், இந்த திட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையை கண்டிக்கின்றேன். வன்முறை இதற்கு தீர்வாகாது. பாதுகாப்பு துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் எவரேனும் இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டார் அவர்கள் காவல்துறையிடமிருந்து தடையில்லா சான்றை பெற முடியாது” என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எதிர்க்கட்சிகள் கடும் அமளி: நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு

Gayathri Venkatesan

16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Vandhana

கொரோனா எதிரொலியாக தஞ்சை பெரிய கோயில் மூடல்!

Gayathri Venkatesan