ரூ.2 கோடி சொத்து கொண்டவரிடத்திலிருந்து 4 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

ரூ.2 கோடி சொத்து கொண்டவரிடத்திலிருந்து 4 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த அய்யணன் என்பர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், கோபாலகிருஷ்ணன் என்பவர்…

ரூ.2 கோடி சொத்து கொண்டவரிடத்திலிருந்து 4 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த அய்யணன் என்பர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், கோபாலகிருஷ்ணன் என்பவர் சுமார் 4 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். எனவே அவரிடமிருந்து ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு தர வேண்டும் என்றும் கோரி இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.ஏன்.பிரகாஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், நிலத்தை ஆக்கிரமித்துள்ள கோபாலகிருஷ்ணன் என்பவர் தேர்தலில் போட்டியிடும் போது தனக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்து இருப்பதாக கூறியுள்ளார். இவ்வளவு சொத்து மதிப்பு வைத்துள்ளவர் பூமிதான நிலத்தை வைத்திருக்க முடியாது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றார்.

எதிர் மனுதாரர் தரப்பில், சம்பந்தப்பட்ட நிலம் எங்கள் தந்தைக்கு பூமி தானமாக வழங்கப்பட்டது. அந்த நிலத்தை நாங்கள் விவசாயம் செய்து முன்னேறி வந்துள்ளோம் என கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரர் கார்மேகம் ரூ.2 கோடிக்கு சொத்து உள்ளது என பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். எனவே, இவர்களது ஆக்கிரமிப்பு சட்ட விரோதம். ஆகையால் பூமிதான நிலத்தில் இருவரது ஆக்கிரமிப்புகளை 3 மாதத்துக்குள் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.