ஸ்ரீகாயநிர்மலேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜைகள்- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

குருபெயர்ச்சியையொட்டி சேலத்தில் உள்ள ஸ்ரீமாயநிர்மலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். குருபகவான் ஆண்டுதோறும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர்வது வழக்கமாகும். நன்மைகளை அள்ளி…

குருபெயர்ச்சியையொட்டி சேலத்தில் உள்ள ஸ்ரீமாயநிர்மலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

குருபகவான் ஆண்டுதோறும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர்வது வழக்கமாகும். நன்மைகளை அள்ளி தரும் குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடம்பெயந்துள்ளார். நள்ளிரவு 11.26 மணியளவில் குருபகவான் இடம் பெயர்ந்தார்.  மேஷ ராசியில் குருபகவான் 375 நாட்கள் இருக்க உள்ளார்.

இதனையொட்டி தமிழகமெங்கும் குரு தலங்களில் சிறப்பு பூஜைகள் அதிகாலை முதலே நடைபெற்றன. அதன்படி சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை பகுதியில் அமைந்துள்ள
மிகப்பழமையான பிரசித்திப் பெற்ற ஸ்ரீகாயநிர்மலேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் தட்சினாமூர்த்தி சுவாமிகளுக்கு சந்தனம்,விபூதி உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

அதனைதொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள் காட்டப்பட்டது. அதனையடுத்து சரியாக இரவு 11.26 மணிக்கு ராசிக்கு இடம்பெயருகையில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை சுவாமியை மனமுருக வேண்டினர். பின்னர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் கலந்துக் கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.