கன்னியாகுமரி அருகே தக்கலையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர் மனோதங்கராஜ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோதங்கராஜ் தக்கலை பகுதியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதற்கிடையே ஒவ்வொரு துறை மருத்துவர்கள் அறையிலும் உள்ள வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் இன்று மட்டும் 5க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணிக்கு வாராத நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து மருத்துவர்கள் சேவை மனப்பான்மை உடன் பணியாற்ற வேண்டும் என கேட்டு கொண்டார்.







