தமிழ் நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. அந்த வகையில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது.
இந்த தேசிய கூட்டணியில் தமாகா, அன்புமணி தரப்பு பாமக ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தமிழ்நாடு இன்று பாஜக நிர்வாகிகள் டெல்லியில் பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
டெல்லி தீன் மூர்த்தி சாலையில் உள்ள பியூஷ் கோயல் இல்லத்தில் நடைபெற்று வரும் இந்த சந்திப்பில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு தேர்தல் நிலவரம், தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதிப் பங்கீடு, பிரதமரின் சென்னை வருகை உள்ளிட்டவை குறித்து ஆலோக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.







