தமிழ் ஆன்மீக இலக்கியங்களில் ஒன்றான திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஈடுபட்டு வருகிறார்.
அதன் படி திருவாசகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு இசையமைத்து பாடல் ஒன்றை ஜி.வி. பிரகாஷ் உருவாகியுள்ளார். திருவாசகத்தின் முதல் பாடல் வரும் ஜனவரி 22 அன்று ஜி.வி. பிரகாஷ் தனது யூடியூப் சேனலில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாடலின் ஒரு பகுதியை, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முன்னிலையில் அவர் இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.







