“தேர்தல் அரசியலை தாண்டி சேவை அரசியலை முன்னெடுக்கிறேன்”:சைதை துரைசாமி

எம்.ஜி.ஆரின் சொல்லை அரச கட்டளையாக ஏற்று தேர்தல் அரசியலை தாண்டி சேவை அரசியலை முன்னெடுக்கிறேன் என சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சைதை துரைசாமி…

எம்.ஜி.ஆரின் சொல்லை அரச கட்டளையாக ஏற்று தேர்தல் அரசியலை தாண்டி சேவை அரசியலை முன்னெடுக்கிறேன் என சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சைதை துரைசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சைதை துரைசாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தான் சென்னை பெருநகர மேயராக இருந்தபோது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை தொடங்கி வைத்ததாக தெரிவித்தார்.

எம்.ஜி.ஆரின் பாடல்களால் ஈர்க்கப்பட்டு 14 வயது முதல் அவர் கரம் பற்றி படிப்பதாகக் கூறிய சைதை துரைசாமி, அவரது சொல்லை அரச கட்டளையாக ஏற்று இன்றுவரை சேவை அரசியலுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறினார். தான் சேவை அரசியலில் செய்த பணிகள் அடித்தட்டு மக்களை எந்த அளவிற்கு சென்று சேர்ந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளவே அனைத்து பகுதிகளுக்கும் நடந்தே சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.