பிரதமர் நரேந்திர மோடி நடிகர் ரஜினிகாந்த் தாதா சாகேப் விருது பெற்றதையடுத்து ‘தலைவா’ என குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழக முதல்வர் பழனிசாமி நடிகர் ரஜினிகாந்த்துக்கு தொலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு 1966-ம் ஆண்டு தாதா சாகேப் விருது வழங்கப்பட்டது அதற்குப்பிறகு 2010-ம் ஆண்டு இயக்குநர் கே.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழ் திரையுலகில் மூன்றாவது நபராக நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடிகர் அமிதாப்பச்சனுக்கு தாதா சாகேப் விருது வழங்கப்பட்டது. கொரோனா நோய்த் தொற்று காரணமாக 2020-ம் ஆண்டு இவ்விருது வழங்கப்படவில்லை.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்த் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்துக்கு பிரதமர் மோடி தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தெரிவித்துள்ள ட்வீட்டர் வாழ்த்து செய்தியில், “தலைமுறைகளைக் கடந்து தன்னுடைய திரைப்பணியால் மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர் நடிகர் ரஜினிகாந்த், ஒருசிலரின் பணிகள் தனித்துவமானவை, மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் அன்பைப் பெற்றவர். தலைவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என மோடி ட்வீட் செய்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில்,“திரைத்துறையில் தங்களது நடிப்புத் திறமைக்கும், கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம் இந்த தாதா சாகேப் பால்கே விருது ஆகும். தாங்கள் இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன்.தாங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.







