முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பங்குனி உத்திர திருவிழாவிற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

பங்குனி உத்திர திருவிழாவிற்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 5ம் தேதி பம்பையில் ஆராட்டு விழா நடைபெறுகிறது.

உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும்
லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். நடப்பாண்டிற்கான மகரஜோதியை
தரிசிப்பதற்காக கடந்த ஜனவரி 14-ம் தேதி இரண்டு லட்சத்திற்கும் அதிகமான
பக்தர்கள் குவிந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதேபோன்று ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இருப்பினும் இன்று வேறு பூஜைகள் எதுவும் நடை பெறாது. நாளை காலை தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடி ஏற்றப்படுகிறது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

ஆன்லைனில் முன் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில் நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. விழாவின் இறுதி நாளான ஏப்ரல் 5-ந் தேதி பம்பையில் ஆராட்டு விழா நடைபெறும். அன்று மாலை கொடியிறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவடைகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதிய அமைச்சரவை; முக்கிய மத்திய அமைச்சர்கள் ராஜினாமா?

Halley Karthik

சீரியல் நடிகருடன் மகள் காதல் – நடிகர் ராஜ்கிரண் விளக்கம்

Dinesh A

8 ஆண்டுகளில் பாதியாக குறைந்த இடதுசாரி தீவிரவாதம்

Mohan Dass