ஜோக்கர் 2 படப்பிடிப்பில் லேடி காகா; முதல் முறையாக வெளியான ’ஹார்லி க்வின்’ லுக் -இணையத்தை கலக்கும் வீடியோக்கள்!

ஜோக்கர் 2  படப்பிடிப்பில் ஹார்லி க்வின்னாக லேடி காகாவின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோக்கள் வெளியாகி  ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல அமெரிக்க பாடகியும் பாடலாசிரியருமான லேடி காகா விரைவில் ஒரு குற்றவாளியாகவும், ஜோக்கரின் காதலியாகவும்,…

ஜோக்கர் 2  படப்பிடிப்பில் ஹார்லி க்வின்னாக லேடி காகாவின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோக்கள் வெளியாகி  ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல அமெரிக்க பாடகியும் பாடலாசிரியருமான லேடி காகா விரைவில் ஒரு குற்றவாளியாகவும், ஜோக்கரின் காதலியாகவும், ஹார்லி க்வின்  என்ற கதாப்பாத்திரத்தில் ஜோக்கர் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஹார்லி க்வின்னாக நடிக்கும் காகாவின் ஃபர்ஸ்ட் லுக் கசிந்துள்ளது. அவரின் இந்த லுக் நியூயார்க் நகரில் படத்திற்கான ஒரு முக்கியமான காட்சி படமாக்கும் போது கசிந்துள்ளது. மேட்சிங் டாப், கருப்பு நிற குட்டைப் பாவாடை மற்றும் சிவப்பு கோட் அணிந்த காகாவின் தோற்றம், ஹார்லி க்வினின் அசல் தோற்றத்திற்கு மிகவும் நெருக்கமாக உள்ளது.

https://twitter.com/ladygaganownet/status/1639612694440337408?s=20

ஜோக்கர் 2 படப்பிடிப்பில் இருந்து காகாவின் பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களின் படி, க்வின், கோதம் போலீஸ் அதிகாரிகளுடன் படிக்கட்டுகளில் இறங்கி நடந்து செல்லும் பல படங்கள் இருந்தன. மற்றொரு வீடியோவில், க்வின் ஆத்திரமடைந்த ஒரு குழுவினரால் கும்பலாகத் தாக்கப்படுகிறார். அதே நேரத்தில் அவர் அவர்களைக் கவனிக்காமல் கீழே செல்கிறார்.

ஜோக்கர் படத்தை டோட் பிலிப்ஸ் இயக்கியுள்ளார். ஜோக்கர்: ஃபோலி டியூக்ஸ் அக்டோபர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.