உயிருக்கு போராடிய மூதாட்டியை மருத்துவமனையில் சேர்த்த எஸ்.பி; குவியும் பாராட்டு!

ஸ்ரீவில்லிபுத்தூரில் உயிருக்கு போராடிய மூதாட்டியை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த மாவட்ட கண்காணிப்பாளரை பொதுமக்கள் பாராட்டினர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், மாயாண்டிபட்டி தெருவில் மூதாட்டி ஒருவர் உணவு ஏதுமின்றி உயிருக்கு…

ஸ்ரீவில்லிபுத்தூரில் உயிருக்கு போராடிய மூதாட்டியை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த மாவட்ட கண்காணிப்பாளரை பொதுமக்கள் பாராட்டினர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், மாயாண்டிபட்டி தெருவில் மூதாட்டி ஒருவர் உணவு ஏதுமின்றி உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதாக விருதுநகர் மாவட்ட கண்காணிப்பாளா் சீனிவாசபெருமாளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு வந்த அவர், மூதாட்டியை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.

மேலும் சிகிச்சை பெற்று வரும் மூதாட்டியின் உதவிக்காக ஒரு பெண் காவலரை நியமிக்கவும் உத்தரவிட்டார். இதுகுறித்து விருதுநகர் மாவட்ட எஸ்.பி. சீனிவாசபெருமாள், மூதாட்டிக்கு சிகிச்சை பெற்று உடல் நலம் தேறியவுடன் முதியோர் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று
தெரிவித்தார்.

முன்னதாக  எஸ்.பி வரும்போது பழங்கள் மற்றும் அணிவிக்க உடை கொண்டு வந்து மூதாட்டிக்கு வழங்கினார். ஆதரவற்ற நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டி பற்றி தகவல் கிடைத்தவுடன்  சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த எஸ்.பி யை பொதுமக்கள் பாராட்டினர்.

—-ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.