உக்ரைன் ராணுவ பயிற்சி மையத்தின் மீது ரஷ்யா தாக்குதல் – 3 பேர் உயிரிழப்பு!

உக்ரைன் ராணுவ பயிற்சி மையத்தின் மீது ரஷ்யா நடத்தியுள்ள தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 3 வருடங்களாக  போர் நடைப்பெற்று வருகிறது.  நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா இப்போரை தொடங்கியது. அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. இப்போரில் இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுவருகிறார்.

மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யாவனது உக்ரைனுடனான போரை இன்னும் 10 நாட்களுக்குள் நிறுத்தவேண்டும் எனவும் இல்லாவிட்டால் கடுமையான வரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார். ஆனால் டிரம்பின் எச்சரிக்கை விடுத்த போதிலும், உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் உக்ரைன் ராணுவ பயிற்சி மைதானம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், 18 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலானது செர்னிவ் பிராந்தியத்தில் ஹோன்சரிவ்ஸ்கே அருகே உள்ள உக்ரைனின் 196ஆவது பயிற்சி மையத்தில் நடத்தப்பட்டுள்ளது. இரண்டு இஸ்கந்தர் ஏவுகணை மூலம் இந்த  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் மத்திய உக்ரைனில் உள்ள ஒரு பயிற்சி மைதானத்தின் மீது ரஷ்ய தாக்குதல் நடத்தியதில் 12 படைவீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் உக்ரைனின் தரைப்படைகளின் தளபதி  வேறு பதவிக்கு மீண்டும் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது  ராணுவ பயிற்சி மையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.