உலகத்தை மாற்றும் கிராமப்புற பெண் தொழில் முனைவோர்கள்; ராகுல் காந்தி

கிராமப்புற பெண் தொழில் முனைவோர்கள் உலகத்தை மாற்றிக்கொண்டுள்ளனர் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கிராமப்புற தொழில்முனைவோர்களால் உலகம் மாறிக்கொண்டுள்ளது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சுதந்திர போராளி சரோஜினி…

கிராமப்புற பெண் தொழில் முனைவோர்கள் உலகத்தை மாற்றிக்கொண்டுள்ளனர் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கிராமப்புற தொழில்முனைவோர்களால் உலகம் மாறிக்கொண்டுள்ளது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சுதந்திர போராளி சரோஜினி நாயுடுவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட வீடியோவில் “கிராமப்புற பெண் தொழில்முனைவோர்கள் உலகத்தை மாற்றிவருகின்றனர். இவர்களால் கிராமப்புற பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது, பெண்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் நல்லதொரு எதிர்காலத்தை நம்மால் உறுதி படுத்த முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “கிராமங்கள் முன்னேறினால்தான் நாடு முன்னேற்றமடையும். இந்தியாவின் கிராமங்கள் முன்னேறும் போது இந்தியாவும் முன்னேற்றப் பாதையில் செல்கிறது. அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.