ஹிஜாப் அணியாதபோது பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகின்றனர்; காங்கிரஸ் தலைவர்

ஹிஜாப் அணியாதபோது பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதாக  காங்கிரஸ் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு சென்ற பெண்ணை கல்லூரி வளாகத்தில் நுழையவிடாமல் மாணவரகள் தடுத்தனர். இந்த சம்பவத்தின்போது காவித்துண்டு…

ஹிஜாப் அணியாதபோது பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதாக  காங்கிரஸ் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு சென்ற பெண்ணை கல்லூரி வளாகத்தில் நுழையவிடாமல் மாணவரகள் தடுத்தனர். இந்த சம்பவத்தின்போது காவித்துண்டு அணிந்துகொண்டு சில மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் என்றபோது ஒற்றை பெண்ணாய் நின்று அல்லாஹு அக்பர் என்ற முழக்கத்தை அந்த பெண் கையிலெடுத்தார்.

நாடு முழுவதும் இந்த விவகாரத்தில் கல்லூரி பெண்ணின் செயலுக்கு பாராட்டுகள் கிடைத்ததுடன் பேசுபொருளானது. கர்நாடகா தொடர்ந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பல அரசியல் கட்சி தலைவர்கள் இருவேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் சமீர் அகமது, ஹிஜாப் அணியாதபோது பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகின்றனர் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அந்த செய்தியாளர் சந்திப்பில் சமீர் அகமது  பேசியதாவது, “ஹிஜாப் என்றால் இஸ்லாத்தில் பர்தா என்று பொருள். வளரும் பெண்கள் தங்களது முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டும். முக அழகை வெளிக்காட்டக் கூடாது. உலக அளவில் அதிகப்படியான பாலியல் பலாத்கார புகார்களை கொண்டுள்ள நாடு என்றால், அது இந்தியாதான் என நினைக்கிறேன். இதற்கான காரணம் பெண்கள் ஹிஜாப் அணியாததே. ஹிஜாப் அணியாதபோதுதான் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகின்றனர். ஹிஜாப் அணிவது கட்டாயமில்லை. ஆனால், அது கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவருகிறது” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.