பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களை காப்பற்ற ஆட்சியாளர்கள் முயல்கிறார்கள்! – கனிமொழி

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களை காப்பற்ற ஆட்சியாளர்கள் முயல்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கயத்தாறு, சுப்பிரமணியபுரம், கழுகுமலை ஆகிய பகுதிகளில் மக்கள் கிராம சபை…

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களை காப்பற்ற ஆட்சியாளர்கள் முயல்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கயத்தாறு, சுப்பிரமணியபுரம், கழுகுமலை ஆகிய பகுதிகளில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்றார்.

திமுகவின் போராட்டத்தால் தான் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதாகவும் கனிமொழி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply