முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஆரஞ்சு கேப்-ஐ கைப்பற்றினார் ருதுராஜ்

627 ரன்களை எடுத்து ஆரஞ்சு கேப்-ஐ கைப்பற்றினார் ருதுராஜ் கெய்க்வாட்.

துபாயில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.

ஐபிஎல் தொடரில், லீக் போட்டிகள் முடிந்து ‘பிளே-ஆப்’ சுற்றுகள் நடந்தன. இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில், முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. வெளியேற்றுதல் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வென்றது.

இரண்டாவது தகுதி சுற்றில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதின. இதில் கொல்கத்தா வெற்றி பெற்றதை அடுத்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இந்நிலையில் இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா அணி இன்று மோதுகிறது.

இந்த போட்டியில், டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது கொல்கத்தா அணி. இந்த போட்டியிலும் ரெய்னா இல்லாமல் களமிறங்குகிறது சென்னை அணி.

சென்னை அணி சார்பாக டு பிளசிஸ், கெய்க்வாட், அலி, ராயுடு, உத்தப்பா, தோனி, ஜடேஜா, பிராவோ, தாக்கூர், சாஹர், ஹேசில்வுட் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

இந்நிலையில், சிஎஸ்கேவிற்காக ஒரு ஒரு சீசனில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் கெய்க்வாட் 16 இன்னிங்ஸில் 627 ரன்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். முன்னதாக 2013ல் மைக்கேல் ஹசி 733 ரன்களை குவித்திருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது. இதன் மூலம் கெய்க்வாட் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

“மானிய விலையில் ஸ்கூட்டர் திட்டத்திற்கு வரவேற்பில்லை” – அமைச்சர் பெரியகருப்பன்

Halley Karthik

பொல்லார்ட் காயம் : பாக். தொடரில் இருந்து விலகல்

Halley Karthik

RTE மாணவர் சேர்க்கை; கால அவகாசம் நீட்டிப்பு

Halley Karthik