கோயில்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம் மற்றும் 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோயில் மற்றும் எருமைவெட்டி பாளையம் வரமுக்த்தீஸ்வரர் கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, 12 ஆண்டுகளுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடத்தாத அனைத்து கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் சொத்துக்கள் அனைத்தும் மீட்கப்படும் என தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு, இதுவரை கோயில்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலங்கள் மற்றும் 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.