முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழக மீனவர்களை பாதுகாக்க கோரி முதலமைச்சருக்கு, ஓ.பி.எஸ். கோரிக்கை!

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரிடம் இருந்து பாதுகாக்க வலியுறுத்தி, சடமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பி.எஸ். அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
மீன்பிடி தடை காலம் முடிந்து கடந்த மாதம் 30ம் தேதி தமிழக மீனவர்கள் கடலுக்கு சென்றனர். ஆனால் அப்போது இருந்து, இப்போது வரை தொடர்ந்து இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தாக்குவதாகவும், மீனவர்களையும், அவர்களின் வலைகளை சேதப்படுத்துவதாகவும் பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். இதனால் மீனவர்களின் உயிருக்கு ஆபத்து நிலவுவதால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என கூறியுள்ள ஓ.பி.எஸ். மீன் பிடிக்க செல்லாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து, இலங்கை கடற்படையின் தொல்லை இல்லாமல் மீனவர்கள் மீன் பிடிக்க உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தேவைப்பட்டால் மத்திய வெளியுறவுத்துறையின் உதவியைப் பெற்று மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

உ.பி.யில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஆய்வுக் குழு அமைக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு!

Niruban Chakkaaravarthi

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

Vandhana

அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து சேவை தொடக்கம்

Ezhilarasan