அதிமுக பொதுச்செயளாலரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று காலை சந்தித்தார். இச்சந்திப்பின் போது ஆளுநரிடம் அவர் திமுக ஆட்சியில் ரூ. 4 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மக்கள் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: ” திமுக ஆட்சியில் 2021 முதல் தற்போது வரை நடைபெற்ற ஊழல்கள் குறித்த பட்டியலை ஆளுநரிடம் வழங்கியுள்ளோம். இந்த பட்டியல் குறித்த விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்.
மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை வரவேற்கிறோம். ஏனென்றால் அது அதிமுகவின் திட்டம். கிட்னி முறைகேடு விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்டுள்ளதால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை. திமுகவிற்கு தேர்தல் பயம் வந்துவிட்டதால் பொங்கல் பரிசாக ரூ.3000 அறிவித்துள்ளது. இன்று தமிழகமே போராட்டகளமாக மாறி உள்ளது.







