நடிகர் விஜய் – ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ’ஜன நாயகன்’. அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜயின் கடைசி படம் என்பதால் இப்படத்தின் மீது ஏராளமான எதிர்ப்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பாபிதியோல், நரேன், மமிதா பைஜு, பிரியா மணி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொங்கல் திருநாலை முன்னிட்டு இப்படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகிறது.
இந்த சூழலில் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் வழங்குவது இழுபறி நீடித்து வருகிறது. திரைப்படத்தை கடந்த மாதம் தணிக்கைக்கு அனுப்ப பட்ட நிலையில் தற்போது வரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரி படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்ரு பிற்பகல் விசாரிக்கப்பட உள்ளது.







