ரூ.300 கோடி மதிப்பிலான பிட்காயின் வைத்திருந்தவரை கடத்திய காவல்துறை அதிகாரி!

ரூ. 300 கோடி மதிப்பிலான பிட்காயின் வைத்திருந்த நபரை கடத்திய 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறை கைதுசெய்துள்ளனர். மஹாராஸ்டிரா, பூனே பகுதியில் பிட்காயின் வைத்திருந்த நபரை கடத்திய காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட…

ரூ. 300 கோடி மதிப்பிலான பிட்காயின் வைத்திருந்த நபரை கடத்திய 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறை கைதுசெய்துள்ளனர்.

மஹாராஸ்டிரா, பூனே பகுதியில் பிட்காயின் வைத்திருந்த நபரை கடத்திய காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட 7 பேர் அடங்கிய கடத்தல் கும்பலை அப்பகுதியை சேர்ந்த காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். பிம்ப்ரி-சின்ச்வாட் நகரத்தில் வர்த்தக வியாபாரி ஒருவர் ரூ. 300 கோடி மதிப்புள்ள பிட்காயின்களை வைத்திருந்துள்ளார். இதனை அப்பகுதியில் காவல்துறை குற்றப்பிரிவில் பணியாற்றிய கான்ஸ்டபிள் திலிப் துக்காராம் தெரிந்துகொண்டு அவரை கடத்த முயன்றுள்ளார். இந்த முயற்சியில் தன்னுடன் மேலும் 7 பேரை சேர்த்துக்கொண்டு கடந்த ஜனவரி 14ம் தேதி அவரை கடத்தியுள்ளார் திலிப் துக்காராம்.

கடத்தப்பட்ட வினய் நாயக் என்பவரின் நண்பர்கள் அளித்த புகாரின் பெயரில் எஃப்ஐஆர் பதிவு செய்த காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். கிட்டத்தட்ட 15 நாட்களுக்குப் பிறகு கடத்தலில் ஈடுபட்ட குற்றப்பிரிவு காவலர் திலிப் துக்காராம் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் இதுகுறித்து பேசிய காவல் ஆணையர் ஆனந்த் போய்ட், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.