காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயன்று வருகிறது. ஆனால் இதற்கு தமிழ் நாடு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் மேகதாது விவகாரம் குறித்து கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமாரிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தலைமையில் அம்மாநில அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
டெல்லியில் உள்ள கர்நாடகா இல்லத்தில் இக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம், மகதாயி நீர்த்திட்டம் உள்ளிட்ட பல்வேறு நீர் திட்டங்கள் குறித்தும் மத்திய அரசிடம் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு கிடைக்கப்பெற வேண்டிய நிதிகள் குறித்தும் டி.கே. சிவகுமார் ஆலோசனை நடத்தி வருகிறார்




