அஜித்குமார் நடிப்பில் உருவாகி உள்ள ’வலிமை’ திரைப்படம் பிப்ரவரி 24-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம் கொரோனா பரவலால் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வருவதால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு, இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
https://twitter.com/SureshChandraa/status/1488739040488656901
இந்நிலையில் நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அவரது ட்விட்டர் பக்கத்தில் வலிமை திரைப்படம் பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.







