ராயப் பேட்டை : அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து..!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நான்குமாடி கட்டடத்தின் மேல் தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்ப்ட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயிணை கட்டுக்குள் கொண்டுவந்தனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ராதாகிருஷ்ணன் சாலையில் ரியல் டவர் என்ற…

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நான்குமாடி கட்டடத்தின் மேல் தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்ப்ட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயிணை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ராதாகிருஷ்ணன் சாலையில் ரியல் டவர் என்ற
வணிகவளகம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் பல்வேறு அலுவலகங்கள்
செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று மின் கசிவு காரணமாக வணிக வளாகத்தில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மள மளவென பரவி கட்டத்தின் மேல் தளத்தில் உள்ள செல்போன் டவரிலும் தீ பற்றி  எரிந்து கொண்டிருந்தது. அப்பகுதியே புகை மூட்டமாய் காட்சியளித்தது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மயிலாப்பூர்,தேனாம்பேட்டை மற்றும் திருவல்லிக்கேணி உள்ளிட்ட தீயணைப்பு அலுவலகங்களில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை வீரர்கள் வணிக வளாகத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயிணை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்து குறித்து போலீசார்  விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். தீ விபத்து காரணமாக இராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து அஜந்தா மேம்பாலம் சாலை வரை  வாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்து சென்றன. விடுமுறை நாள் என்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.