தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் ஜெயித்தவர்கள் சங்கத்திற்கு நல்லது செய்யட்டும் என நடிகை தேவையானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நூற்றாண்டு சிறப்பு கொண்ட தமிழ் சினிமாவில் பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமான சங்கம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக தேனாண்டாள் முரளி உள்ளார்.
இந்த சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் இன்று (ஏப்ரல் 30) காலை 9 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ள இந்தத் தேர்தல் மூலம் தலைவர், 2 துணைத் தலைவர், செயலாளர்கள், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதில், தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் முரளி ராமசாமியும், மற்றொரு அணியில் மன்னனும் போட்டியிடுகின்றனர். மேலும், இந்தத் தேர்தலுக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் ஆகிய இருவரும் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றுகின்றனர்.
காலை 9 மணிக்கு தொடங்கி இதன் வாக்குப்பதிவு மாலை வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து, வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் வாக்களித்த பிறகு நடிகை தேவயாணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தேர்தல் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. ஜெயித்தவர்கள் சங்கத்திற்கு நல்லது செய்யட்டும். முன்னாள் சங்கத்தை பற்றி பேச தேவையில்லை
நிறைய நலத்திட்டங்கள் உள்ளது. ஒன்று ஒன்றாக நிறைவேற்றுவோம். ஜெயித்தவர்கள் சங்கத்திற்கு நல்லது செய்யட்டும் என நடிகை தேவையானி தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா








